ஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்! | Sri Krishna Kathai Koothu Group - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்!

வெ.நீலகண்டன், படங்கள் : அ.சரண்குமார்

ட்டைக்கூத்து... உயிரோடு உணர்வைக் கலந்து தமிழர்கள் உருவாக்கிய பலநூறு கலைவடிங்களில் ஒன்று. இப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வளர்த்த கூத்துகள் பலவும் கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட நிலையில், அழிவின் விளிம்பில் இருக்கும் கட்டைக்கூத்து எனும் அற்புதக் கலைவடிவத்தைக் காப்பாற்றுவதற்காக ஒன்பது பெண்கள் கைகோத்திருப்பது அழகோ அழகு!

கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப, கல்யாண முருங்கை மரத்தால் (இந்த மரத்தில் செய்யப்படும் பொருட்கள் அதிக கனமில்லாமல் இருக்கும்) செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்துகொண்டு இசையும் அடவுகளும் கலந்து நிகழ்த்தப்படும் தெய்வீகக் கலைதான் கட்டைக்கூத்து. இரவு தொடங்கி, அதிகாலை வரை இடைவெளி இல்லாமல் நடக்கும் இந்தக் கூத்தில் ஆடுவதற்கு மனவலிமையும் உடல்வலிமையும் மிகமிக முக்கியம். திரைப்படங்களின் ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்பு வரை மக்களின் விருப்பத்துக்கு உரிய கலைகளில் முக்கிய இடத்தில் இருந்தது கட்டைக்கூத்து!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick