அதெல்லாம் ஒரு காலம்..!

ப.சூரியராஜ் ஓவியம் கோ.ராமமூர்த்தி

அன்று முதல் இன்று வரை எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டன. அவற்றில், தீபாவளியும் ஒன்று. அந்த பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து, இந்த ஐ மேக்ஸ் காலம் வரை நம்ம தீபாவளி எப்படியெல்லாம் மாறிடுச்சுனு ஒப்பிட்டுப் பார்ப்போம். வாங்க மக்கா..!

ப்போ எல்லாம் தீபாவளினாலே, முதலில் ஞாபகத்துக்கு வர்றது புது டிரெஸ்தான். எதிர்வீட்டு அண்ணன், பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் பேகி, பேரல், சுடி, மிடினு கலர் கலராப் போடுறதை வெறிக்க வெறிக்கப் பார்த்து, இந்த தீபாவளிக்கு நாமளும் எப்படியாவது அதை வாங்கிப் போடணும்னு வெறியாவோம். ஆனா, கடைசியில் கடைக்குக் கூட்டிப் போய் சட்டை, பேன்ட் பிட் வாங்கிக் கொடுத்திருப்பார் அப்பா. அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் அந்தப் பிஞ்சு மனசில் தாங்கிக்கிட்டு, துணி எப்போ தெச்சுவரும்னு டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்திருப்போம். அந்தக் காத்திருப்புதானே தீபாவளியை சுவாரஸ்யமாக்குச்சு..!

னா, இப்போ செல்போன்ல ஸ்வைப் பண்ணி, ஆன்லைன்ல துணி வாங்கிப் போட்டுக்கிட்டு, அழுக்காகிடும்னு அரை மணி நேரத்துல கழட்டி வெச்சுடுறோம்.

ம்ம அம்மா அடுப்பு மூட்டி முறுக்கு, அதிரசம் சுடும்போது, நமக்குத் திடீர் பாசம் வந்து கூடமாட உதவி செய்வோம். அந்தத் திடீர் பாசம் வந்ததுக்கான நோக்கம், உதவி செய்ற கேப்ல நாலஞ்சு முறுக்கை ஆட்டையைப் போட்டு அமுக்கத்தான்னு நம்ம அம்மாவுக்கும் நல்லாவே தெரியும். அக்கா மாவு பிழிய, அப்பா அடுப்பு ஊத, அம்மா சுட்டு எடுக்க... என எண்ணெய் ஊற்றி, நேசம் கொட்டி டீம் வொர்க்ல நிறைந்திருக்கும் முறுக்குச் சட்டி.

ப்போ, `ஸ்வீட் வாங்கினால் காரம் இலவசம்’னு எந்தக் கடையிலே போர்டு தொங்குதோ, அதுக்குள்ளே நுழைஞ்சு அஞ்சு கிலோ ஸ்வீட்டை அஞ்சு நிமிஷத்துல பர்ச்சேஸ் பண்ணிட்டுக் கிளம்பிடுறோம். போங்கய்யா...

ந்த வருஷ தீபாவளிக்கு ரிலீஸாகப் போகிற படங்களின் அத்தனைத் தகவல்களையும் விரல்நுனியில் சேமித்து வைத்திருப்போம். காலங்காத்தால முதல் வேலையா தியேட்டர் முன்னாடி நின்னு, கட்அவுட், போஸ்டர் எல்லாத்தையும் `பே'னு வாயைப் பிளந்து பார்த்துட்டு, பேசாம வீட்டுக்கு வந்துருவோம். வீட்டுக்கு வந்த பிறகும் தியேட்டர்ல அடிச்ச தப்பு சத்தமும், விசில் சத்தமும் காதுக்குள்ளே கேட்டுகிட்டே இருக்குமே!  போடு தகிட தகிட...

ல்டிஃபிளெக்ஸ்ல டிக்கெட் புக் பண்ணிட்டு, பாப்கார்ன் காம்போ வாங்கிச் சாப்பிட்டு கம்முனு வீட்டுக்குக் கிளம்பி வந்துடுறோம். படம் பார்த்த ஃபீலிங்கே இருக்க மாட்டேங்குது. ச்சை...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick