ஹேப்பி ‘ஆப்’ஸ்!

தீபாவளி என்றாலே, கொண்டாட்டம் தான். ஆடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், வாழ்த்துகள், உறவுகள், செலவுகள், மகிழ்ச்சிகள்... என இந்தப் பண்டிகைக் காலத்தில் நாம் அனுபவிக்கும் சந்தோஷங்கள் பல. அவற்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு இரட்டிப்பாக்க உதவும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் அறிமுகம் இங்கே...

Tamil Nadu Sweets recipes

கடைகளில் விதவிதமான இனிப்பு வகைகள் கிடைத்தாலும், வீட்டில் அன்பும் பாசமும் கலந்து செய்யும் பலகாரங்களின் சுவையே தனிதான். அதற்கு உதவுகிறது இந்த ஆப். பாரம்பர்யமான இனிப்புகள் மட்டுமின்றி, புதிய இனிப்பு வகைகளின் ரெசிப்பிக்களும் இதில் கிடைக்கின்றன. சுமார் 800 இனிப்பு வகைகளுக்கு இதில் செய்முறை விளக்கம் இருக்கிறது. டவுன்லோடு செய்துவிட்டால் பிறகு, இணைய இணைப்பு தேவையில்லை. லட்டு என்றால் ஜவ்வரிசி லட்டு, ரவா லட்டு, ராகி லட்டு, பூந்தி லட்டு என ஏகப்பட்ட வெரைட்டிகள். போளி, மைசூர்பாகு, முறுக்கு, பணியாரம் என எல்லா வகைப் பலகாரங்களுக்கும் விதவிதமான செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா குறிப்புகளும் தமிழிலேயே இருக்கின்றன. ஒரு ஸ்வீட் ஸ்டாலையே ஒரு ஆப்பில் அடக்கியதுபோல, அத்தனை இனிப்பு!

https://play.google.com/store/apps/details?id=com.rubysoftwarellc.sweetrecipesintamil

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick