பாலி - ஆயிரம் கோயில்களின் தீவு! | Temples in Bali Island - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

பாலி - ஆயிரம் கோயில்களின் தீவு!

மாத்தளை சோமு

ந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் நடுவில்  இருக்கிறது இந்தோனேஷியா. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுசிறு தீவுகள் சூழ்ந்திருக்கும் இந்தத் தேசத்தில் இஸ்லாமியர்களே பெரும்பான்மை. ஆனால், ஒரே ஒரு தீவில் மட்டும் இந்துக்கள் அதிகம் வாழ்கிறார்கள். சரித்திரப் பெருமை பெற்ற அந்தத் தீவின் பெயர், பாலித் தீவு.

‘ஆயிரம் கோயில்களின் தீவு’, ‘கடவுளின் தீவு’ என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்தத் தீவை, ‘உலகின் காலைப்பொழுதே பாலி; அதுவே உலகின் கடைசி சொர்க்கம்’ என்று புகழ்ந்திருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு.

இந்தோனேஷியாவின் 26 மாகாணங்களில் ஒன்றாகத் திகழும் பாலித் தீவு, இந்து மற்றும் பெளத்த மத வரலாறுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

கி.பி. 8-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெளத்தமதம் சார்ந்த கல்வெட்டு ஒன்று பிஜாங் எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. கி.பி.914-ம் ஆண்டில் ஜாவா தேசத்து சைலேந்திர மன்னன் ஸ்ரீகேசரியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது பாலித் தீவு. அவன் பெளத்த மதம் சார்ந்தவன் என்பதால், இந்தத் தீவில் பெளத்தமும் செழித்திருந்தது. இந்தத் தகவலை, தென்சனூர் என்ற இடத்தில் உள்ள பழைய கல்தூண் ஒன்று உறுதி செய்கிறது. அந்தத் தூணில் சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியில் எழுதப்பட்டுள்ள செய்திகள், ஸ்ரீகேசரி பற்றிக் குறிப்பிடுகின்றன.அவனுடைய காலத்தில்தான் பாலித் தீவில், புகழ்பெற்ற ‘கோகஜா’ (Goagajah) குகைக்கோயில் கட்டப்பட்டது. அங்கு பௌத்த மதச் சின்னங்களும், இந்து மதச் சின்னங்களும் இருந்தாலும், அங்கிருந்த பிள்ளையார் சிலையை முன்னிறுத்தி, இன்றைக்கும் ‘யானைக் குகை’ (Elephant Cave) என்றே அது அழைக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick