செல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை! | Laxmi Kubera Pooja - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

செல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை!

கே. நிவேதிதா, ஓவியங்கள் ராஜா, பத்மவாசன்

றியாமை எனும் இருள் அகற்றி, நம் மனதில் ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி. இந்த வார்த்தைக்கு `தீபங்களின் வரிசை’ (தீப+ஆவளி) என்று பொருள் சொல்வார்கள் பெரியோர்கள். நம் வாழ்வில் தீப ஒளி ஏற்றும் இந்த நன்னாள், உன்னதமான தெய்வ வழிபாடுகளுக்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது.

நரகாசுரனை வதைத்து, தர்மத்தை ரட்சித்த கண்ண பரமாத்மாவை அன்று வழிபடுவது வெகு விசேஷம். இந்த தினத்தில் நாம் தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயில் திருமகளும், நீராடும் நீரில் கங்காதேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். ஆகவே, இந்த தேவியரையும் தீபாவளி தினத்தில் மனதார வழிபடவேண்டும்.  மேலும், தீபாவளியை ஒட்டி கேதாரகெளரி விரதமும் கடைபிடிப்பார்கள். மட்டுமின்றி, இல்லங்களில் வறுமை நீங்கவும் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகிடவும் லட்சுமி குபேர பூஜையையும் செய்வார்கள். இந்தப் பூஜை செய்வதால், நம் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick