எளியோருக்கும் இரங்கிய ஸ்ரீராமாநுஜர்

ஸ்ரீராமாநுஜர் 1000எஸ்.கண்ணன்கோபாலன்

``புண்ணிய பாரதத்தில் எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுள் தனிச்சிறப்பு கொண்டவர் அந்த மகான். மிகப் பெரிய தத்துவ ஞானியாக இருந்தாலும் ஏழை எளியவர்களிடமும், சமூகத்தால், `பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று ஒதுக்கப்பட்டவர்களிடமும் அளப்பரிய அன்பும் இரக்கமும் கொண்டார்.

அவர்களுக்காகவே நம்முடைய மதம் சார்ந்த கோட்பாடுகளை எளிமைப்படுத்தினார். அவர்களும் ஆலயத்துக்குச் சென்று வழிபட வழிவகுத்தார். எல்லோருக்கும் இறைவனின் அருள் கிடைக்கவேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார். அந்த அளவுக்கு அவர் ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டிருந்தார்.''

- பல இடங்களில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் சுவாமி விவேகானந்தர் பரவசத்துடனும் நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்ட அந்த மகான் ஸ்ரீராமாநுஜர்.

1017-ம் ஆண்டு,  ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவசோமயாஜி - காந்திமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்ரீராமாநுஜர். 1,000-மாவது ஜயந்தி கொண்டாடப்படும் இந்த வருடத்தில் அவருடைய  சரிதத்தில் இருந்து சில நிகழ்ச்சிகளை இங்கே கொடுத்திருக்கிறோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick