திருவேங்கட சேவை | Temple Special - Thirumalai Thirupati - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

திருவேங்கட சேவை

எஸ்.கதிரேசன்

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிறதே என்ற ஆற்றாமை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அப்படி நீண்ட நேரம் ஆவதற்கு உரிய காரணம் என்ன என்பதை நாம் அறிந்துகொண்டால், பெருமாளின் மேல் நமக்கு கோபம் வராது. நித்தியப்படிக்கு அதாவது தினம்தோறும் அவருக்கு செய்யப்படும் சேவைகளால்தான் இத்தனை நேரம் ஆகிறது. இந்தச் சேவைகள் எல்லாம் இன்று நேற்றல்ல, ஸ்ரீராமானுஜரால் வரையறுக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளாக நடந்துவருபவை. ஒரு நாள் முழுவதும் அங்கு நடைபெறும் சேவைகள் பற்றிய தொகுப்பு இது.

திருமலையில் ஒரு நாள் முழுவதும் சீனிவாசப் பெருமாளுடன் இருந்து அங்கு நடைபெறும் சேவை மற்றும் பூஜைகளைக் கண்டுகளிப்போம். ஒவ்வொரு  சேவை நடந்து முடிந்ததும்தான், ‘ஸ்பெஷல் தரிசனம்’, ‘சர்வ தரிசனம்’, ‘திவ்ய தரிசனம்’ காணவரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருமலையானுக்குரிய நித்திய சேவைகள்

ஸ்ரீநிவாசனுக்கு நித்திய சேவைகள், மற்றும் எத்தனையோ உத்ஸவங்கள் வழிவழியாகத் தங்குதடையின்றி செய்யப்பட்டு வருகின்றன. தலைமுறைகள் மாறினாலும், குறையாத பக்தி சிரத்தையுடன் பக்தர்களைத் திளைக்கச் செய்பவை அவை. நம்மைப் போல் அவர் 8 மணிநேரமும் தூங்குவதில்லை... 8 மணி வரையிலும் தூங்குவதில்லை. சுப்ரபாத சேவையின் மூலம் அவரை விடியற்காலை 3 மணிக்கெல்லாம் பள்ளியெழச் செய்கிறார்கள்.

சுப்ரபாத சேவை

‘கௌசல்யா சுப்ரஜா ராம! பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே!
உத்திஷ்ட நரசார்தூல! கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!!’

ஆழ்வார்கள் கூற்றுப்படி, வழிவழியாக ஆட்செய்யப்பட்டு வரும் கைங்கர்யங்களில் ஒன்று, எம்பெருமானைத் துயிலெழுப்பும் திருப்பள்ளி எழுச்சியை உணர்த்தும் சுப்ரபாத சேவை. இந்த ஸ்தோத்திரங்களை 15-ம் நூற்றாண்டில் ஸ்ரீமணவாள மாமுனியின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய ஸ்வாமி எழுதினார். இந்த திவ்ய கானத்தை எங்கு கேட்டாலும், மனது திருமலை ஷேத்திரத்தைச் சென்றடைகிறது.

ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 3:00-3:30 மணி) இந்த சேவை நிகழும்.

தோமாலை சேவை

அலங்காரப் பிரியனான திருவேங்கட முடையானின் திவ்ய மங்கள மூர்த்திக்கு அநேக புஷ்ப மாலைகளுடன், துளசி மாலையும் ேசர்த்து செய்யும் அலங்காரம் தோமாலை சேவை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick