``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்!''

சுஜிதா

‘சாட்டை’ படத்தில் ‘அறிவழகி’ கேரக்டரில் வந்த அழகழகி மஹிமாதான் ‘குற்றம்-23’ படத்தின் ‘தென்றல்.’ இந்தத் ‘தென்றல்’தான் அவருக்கு ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கொடிவீரன்’ என அடுத்தடுத்து நான்கு படங்களைப் பெற்றுத்தந்திருக்கிறது.

“என்னைப் பொறுத்தவரை நடிப்புங்கிறது கத்துக்கிட்டு வர்றது இல்லை. நம் வாழ்க்கை அனுபவம்தான் நடிப்புக்கான பாடம். ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தப்ப ஓர் ஆவணப் படம் நடிச்சேன். அதைப் பார்த்துட்டு மலையாளத் தயாரிப்பாளர் ஷிபு என்னை தன் `கார்யஸ்தன்' படத்துல நடிக்கவெச்சார். ரொம்பச் சின்ன ரோல்தான். ஆனா, அந்த ரோல்தான் சமுத்திரக்கனி சார் கண்ணுல பட்டு ‘சாட்டை’ வாய்ப்பா அமைஞ்சது. அந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கு துளிகூடத் தமிழ் தெரியாது. ஆனாலும், ‘கதையை, காட்சியை உள்வாங்கிக்கிட்டு நல்லா நடிக்கிற’னு கனி சார் பாராட்டுவார். ‘ஹீரோ ரொம்ப ரொமான்டிக்கா பேசிட்டிருப்பாரு. அது உனக்குப் புரியலைனாலும்கூட அதுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறதுல நீ கில்லி. எந்த மொழியில் வேணும்னாலும் நீ படங்கள் பண்ணலாம்’னு சொல்வார். இப்படி நான் நடிச்ச படங்களுக்கு வர்ற முதல் பாராட்டுகள் எல்லாம் கனி சார்கிட்ட இருந்துதான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்