“என் இனிய தமிழ் ரசிகர்களே...”

பா.ஜான்ஸன்

ரு மொழியில் சிறந்த நடிப்பை வழங்கும் நடிகர்களை அழைத்து வந்து நடிக்கவைப்பது ஏற்கெனவே இருக்கும் வழக்கம்தான். குறிப்பிட்டு மலையாளம் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நிறைய நடிகைகள் தமிழில் அறிமுகமானார்கள். நயன்தாரா போன்று முன்னணி நடிகை அளவுக்கு வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு. சிலர் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்து, காணாமல்போனதும் உண்டு. அதுவே நடிகர்கள் விஷயத்தில் கொஞ்சம் மாறுபட்ட ஒன்று. கம்ஃபர்ட் ஸோன் தாண்டிவர சில தடைகள் இருந்தபோதும்கூட மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் அவ்வப்போது வேறு மொழிகளிலும் தலைகாட்டினார்கள். கொஞ்சம் முன்பு வரை ப்ரித்விராஜ் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். இப்போது அதையும் தாண்டி, தங்கள் எல்லைகளை விரித்துப்பார்ப்போமே என இன்று வந்திருக்கும் புதிய நாயகர்களுக்கு ஆசை எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இப்போது அதில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கும் சில நடிகர்களைப் பற்றிப் பார்ப்போம்...    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்