“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்!” - அர்த்தனா பினு | Actress Arthana Binu interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்!” - அர்த்தனா பினு

சுஜிதா

ர்த்தனா பினு... 2016-ம் ஆண்டு வெளிவந்த `சீதம்மா ஆண்டலு ராமய்யா சிற்றலு' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, `தொண்டன்' படத்தில் சமுத்திரக்கனியின் தங்கையாகத் தமிழுக்கு இறக்குமதி ஆனார். இப்போது ஜி.வி.பிரகாஷின் `செம' படத்தில் அவருக்கு ஜோடி!

``சினிமா என்ட்ரி?’’

``என் பெயர் வெளியில தெரியிற மாதிரி ஏதாவது ஒரு மீடியாவுல வேலை செய்யணும்னு சின்ன வயசு ஆசை. ஒரு மலையாள சேனலுக்கு வீ.ஜே-வுக்கு ஆள் எடுக்கிறாங்க கேள்விப்பட்டுப் போனேன். அது ப்ளஸ் டு படிச்சுக்கிட்டு இருந்த சமயம். வேலைக்கு செலெக்ட் ஆயிட்டேன். ஆனால், வீட்டுல அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒரு வழியா அம்மாவைச் சம்மதிக்க வெச்சு மீடியாவுக்குள்ள நுழைஞ்சுட்டேன். ஆசியாநெட், ஆசியாநெட் ப்ளஸ், ஃப்ளவர்ஸ் டிவி, கெளமுதி சேனல்கள்ல வேலை பார்த்தேன். மாடலிங்ல ஏதாச்சும் பண்ணுவோம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தப்போ, `Online Predators' அப்படிங்கிற குறும்படத்துல நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதைப் பார்த்து டைரக்டர் ஸ்ரீனிவாஸ் நடிக்கக் கூப்பிட்டார். அம்மா, ` திரும்பவும் சினிமாவா... காலை உடைச்சிடுவேன்'னு அதட்டுனாங்க.  எப்படியோ சமாளிச்சுட்டு நடிக்க வந்துட்டேன்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick