“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...” | S.J.Surya talks about Actors Vijay and Mahesh Babu - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”

சனா, படம்: தி.குமரகுருபரன்

“நடிகனாகணும்னுதான் வந்தேன். அதை அடைஞ்சிட்டேன். சந்தோஷமா இருக்கேன்...” இதுதான் எஸ்.ஜே.சூர்யா. இதை அடையத்தான் அவரின் இத்தனை ஆண்டுகாலப் பயணம். ‘இறைவி’ அருளாக ரசிகர்கள் மனதில் இறங்கியவர், ‘நெஞ்சம் மறப்பதில்லை’-‘ராம்ஸே’வுக்காக வெயிட்டிங். இடையில், தமிழ், தெலுங்கில், தான் இயக்கிய மெகா ஹீரோக்களுடன் ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ என வில்லனாக மோதியிருக்கிறார். தான் நினைத்ததைச் செய்து, தான் நினைத்ததை அடைந்து... உண்மையிலேயே இந்த மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்தான்.

“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் ஒருநாள் எனக்கு போன் பண்ணித் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பிச்சார். ‘ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் பண்றேன். அதில் நீங்கள் வில்லன் கேரக்டர் பண்ண முடியுமா சார்?’ என்று கேட்டார். நான் எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘கண்டிப்பா பண்றேன் சார்’ என்றேன். முருகதாஸ் எவ்வளவு பெரிய இயக்குநர்னு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தமிழ், தெலுங்கு, இந்தின்னு பல மொழி நடிகர்கள், ‘இவருடன் ஒரு படமாவது பண்ண மாட்டோமா’ன்னு காத்திருக்காங்க. அவர் நம்மைக் கூப்பிட்டு வில்லனா நடிக்கக் கேட்கிறது எவ்வளவு பெரிய விஷயம். இது எல்லாத்துக்கும்மேல, ‘அவ்வளவு பெரிய டைரக்டர் என்ன செய்யச் சொன்னாலும் செய்யலாம்’னு கண்ணை மூடிக்கிட்டு ‘ஸ்பைடர்’ படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். பிறகு கதையைக் கேட்டதும், ‘நல்லவேளை நடிக்க ஒப்புக்கிட்டோம்’னு நினைச்சேன். ஏன்னா, அந்த அளவுக்கு நல்ல கேரக்டர். அதில் குவாலிட்டியிலே ஒரு நாவல்ட்டி இருந்தது. ஒரு குவாலிட்டியை ராவா சொல்லாமல், அதை ஒரு ஐடியாவுடன் சொல்லியிருந்தார். அவரோட டைரக்‌ஷனின் அடுத்த கட்டம்தான் இந்தப் படம். நான் எதுவுமே கேட்காமல் போய்ப் பண்ணினாலும், எங்கேயும் கம்மியா ஃபீல் ஆகலை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick