ஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு!

சுஜிதா

மந்தா, எமி ஜாக்சன், அமலா பால் எனப் பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர், ரவீனா ரவி. `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். "எங்க அம்மாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... ஸ்ரீஜா ரவி. சின்ன வயசுல என்னை ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போய் டப்பிங் துறையை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. இப்போ நடிப்பு, டப்பிங் - ரெண்டு வாய்ப்புகளும் வருது.'' - விழிகள் விரிய அழகுத் தமிழ்ப் பேசுகிறார், ரவீனா ரவி.

``டப்பிங் டூ ஆக்டிங்?’’

``இவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி நடிச்சேன், இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்கேன். ஆனா, டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க. கொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறினேன். கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு. இப்போ பழகிட்டேன்னு நினைக்கிறேன்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்