“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்!” | Actor Ilavarasu talks about his tamil cinema career - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்!”

சனா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“இயக்குநராகணும்ங்கிற கனவோட மதுரை மேலூரில் இருந்து சென்னைக்கு வந்தவன் நான். அதைத் தவிர போட்டோகிராபர், ஒளிப்பதிவாளர், நடிகர்னு எல்லா வேலைகளையும் பார்த்துட்டேன். வாங்க... இயக்கத்தை எப்போ கைவிட்டேன், நடிப்பை எப்போ கைப்பிடிச்சேன்னு சொல்றேன்” - இவரைப்போல் ஓர் அண்ணன், ஒரு நண்பன் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைப்பவர்களில் ஒருவர், நடிகர் இளவரசு. ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் அடங்கி இருக்கும் பேச்சு இவருடையது. இனி, ஓவர் டு இளவரசு...

``ஸ்டில்ஸ் ரவி, தன் ஃப்ளாஷ் பட்டனை அழுத்தி அழுத்திப் பலருக்குக் கோடம்பாக்கக் கதவை திறந்து வெச்ச கேமராக் கலைஞர். நடிக்கணும்னு வர்றவங்க இவருகிட்ட வந்து அட்டென்டெண்ஸ் போட்டாதான் சினிமாவுல பிரசன்ட் விழும். அறிமுக நடிகர், நடிகைகளை இவர் எடுக்கும் போட்டோதான் சினிமா பி.ஆர்.ஓ-க்களுக்கும் பத்திரிகைகளுக்கும் போகும். இவர் ஒருநாள் பாலுமகேந்திரா சாரோட இருந்தால், அடுத்தநாள் கமல் சார் ஆபீஸ்ல நிற்பார். கோடம்பாக்கத்தைச் சுற்றி வரும் பரபரப்புத் தேனீ. ‘இயக்குநராகணும்னா, பல இயக்குநர்களைப் பார்க்கிற இவர்கிட்ட முதல்ல சேருவோம்’னு நெனைச்சு, ஸ்டில்ஸ் ரவிகிட்ட உதவியாளரா சேர்ந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick