"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற!”

சுஜிதா

`வெற்றிவேல்' படம்மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, `உன்னப் போல ஒருத்தரை' பாடல்மூலம் ரசிகர்களைத் தன் வசம் இழுத்தவர், நிகிலா விமல். தொடர்ந்து `கிடாரி'யிலும் கலக்கியவர், தற்போது லைம்லைட் ஹீரோயினாக வளர்ந்துகொண்டிருக்கிறார்.

``சினிமா என்ட்ரி?’’

``எட்டாவது படிக்கும்போதே மலையாளத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆகிட்டேன். எனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொடுத்தது, சினிமாவுக்குப் போக ஆரத்தி எடுத்து அனுப்பிவெச்சது என் குடும்பம்தான்!’’

``தமிழ் கத்துக்கிட்டீங்க போல?’’

``ஸ்கிரிப்ட் படிச்சுப் பார்க்கவும் வசனங்களை ஈஸியா மனப்பாடம் பண்றதுக்காகவும் கத்துக்கிட்டேன். தவிர, தமிழ் ரொம்பப் பழமையான மொழி. கிராமங்களில் ஷூட்டிங் நடக்கும்போது கவனிச்சுப் பார்ப்பேன், எந்தப் பெயர்ப் பலகையும் இங்கிலீஷ்ல இருக்காது. சொல்லப்போனா, ஷூட்டிங் பிரேக்ல சுத்தி இருக்கிற தமிழ்ப் பெயர் பலகைகளைப் பார்த்துத்தான் தமிழே கத்துக்கிட்டேன். நாம நடிக்கிற மொழி நமக்கு அத்துப்படியா இருந்தாதானே, இன்னும் ஈஸியா கதைக்குத் தகுந்த மாதிரி நடிக்கலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick