“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்!”

சுஜிதா

`மீசைய முறுக்கு' படத்தின்மூலம் அறிமுகமாகியிருப்பவர் ஆத்மிகா. ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆத்மிகாவுக்கு நடனம், கர்னாடக சங்கீதம், வர்மக்கலை, சிலம்பம், தற்காப்புக் கலை... எனப் பலவும் தெரியும்! இப்போது அர்விந்த் சாமியின் `நரகாசுரன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஆத்மிகாவுடன் கொஞ்சம் அரட்டை...

``சினிமா என்ட்ரி?’’

``தமிழ் இலக்கியம், கலைகள் மேல சின்ன வயசுல இருந்தே ஆர்வம். சாண்டில்யன், கல்கியோட புத்தகங்களையெல்லாம் விரும்பிப் படிப்பேன். பார்ட் டைமா மாடலிங் பண்ணிக்கிட்டு, நிறைய விளம்பரப் படங்கள்ல நடிச்சுக்கிட்டிருந்தேன். சினிமாவுக்கு வரணும்னு ஆசையெல்லாம் இல்லை. நல்லா நடிக்க முடியும்ங்கிற நம்பிக்கையும் இல்லை. சினிமாவும் ஒரு கலைதானே... நாம ஏன் அதுல ஸ்கோர் பண்ணக் கூடாதுனு தோணுச்சு. ராஜீவ்மேனன் சாரோட குறும்படத்துல நடிச்சேன். தைரியம் அதிகரிச்சது. பிறகு, `மீசைய முறுக்கு' வாய்ப்பு. ஆரம்பத்துல ஆதியை எனக்கு இசையமைப்பாளரா மட்டும்தான் தெரியும். அவர் படம் எடுக்கப்போறதை நம்பமுடியலை. நான் ஹீரோயின்னு சொன்னதை சுத்தமா நம்ப முடியலை!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick