பயணம் எனும் போதை!

ஊர்சுற்றி

டுமையான வலியில் உழன்றுகொண்டிருந்த நாள்களில் ஒன்று அது. உணர்வுகள் வற்றிப்போய், உணர்ச்சிகள் வெடிப்புகள் கண்டிருந்த ஒரு மனநிலை. மழை தூறிக்கொண்டிருந்த அதிகாலை நேரம். துர்நாற்றம் வீசும் சின்னக் குடுவைக்குள் சிக்கிக்கொண்டதுபோல் மூச்சுவிட அத்தனை சிரமமாக இருந்தது. தூறலில் நின்றவாறே மொட்டைமாடியிலிருந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். கீழிருந்து வளர்ந்து மொட்டைமாடியை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது அந்த முருங்கை மரம். அதில் சில முருங்கைக்காய்கள் `சைஸ் ஜீரோ’விலிருந்தன. அத்தனை ஒல்லி. சில குண்டாக இருந்தன. சில முருங்கைக்காய்கள் குட்டையாக இருந்தன. சில அத்தனை உயரமாக இருந்தன. அனைத்துமே மழையில் மகிழ்ச்சியாக நனைந்துகொண்டிருந்தன. அந்த மரத்தின் கீழே சாந்தமாக நின்றுகொண்டிருந்தது என் சாம்பல் நிற பைக். சில நொடிகளில் முடிவுசெய்தேன்... சில நிமிடங்களில் கிளம்பினேன்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick