பெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை | Elampillai women start Saree business - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

பெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை

யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: எம்.விஜயகுமார்

சேலத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, இளம்பிள்ளை எனும் ஊர். சித்தர்கோயில் அமைந்திருக்கும் கஞ்சமலை அடிவாரத்தில் மஞ்சளும் கரும்பும் வளர்ந்து நின்று வரவேற்கும் அழகிய ஊர். பெயர்ப்பலகையில் கண் பதியும்போதே நம் காதுகளை நிறைக்கிறது விசைத்தறிகளின் இசை. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத் தொழில்... நெசவு. கைத்தறியும் விவசாயமும் இரு கண்களாக இருந்த காலம் ஓய்ந்து, இன்று விசைத்தறிக் கூடங்கள் பெருகியிருக்கின்றன. அவற்றில் பணியாளர்களாக மட்டுமன்றி, வங்கிக் கடன் பெற்று முதலாளிகளாகவும் அசத்துகிறார்கள் பெண்கள்.

வீட்டு, விவசாய வேலைகளை முடித்துவிட்டு, நூற்பு, கோண் போடுவது, சேலை மடிப்பது, முந்தானையில் முடிச்சுப் போடுவது ஆகிய வேலைகளை மட்டுமே முன்னர் பெண்கள் செய்துகொடுத்துக்கொண்டிருந்தார்கள். இன்று, நிலைமை தலைகீழ். நெசவுத் தொழிலின் உற்பத்தியில் பெரும்பங்கு உழைப்பு பெண்களுடையதாக மாறிப்போயுள்ளது. கோரா காட்டன் புடவை உற்பத்தி செய்துவரும் அல்லி, அப்படி ஓர் உழைப்பாளி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick