பாரம்பர்யம்... அழகு! - நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள்!

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்

காபாரதத்தில் புகழ்பெற்ற கிளைக் கதை ஒன்று உண்டு. `அவரவர் அரண்மனை நிறைந்திருக்க வேண்டும். அதற்கு எந்தப் பொருளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற ஒரு போட்டியைப் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வைப்பார் துரோணர். கெளரவர்கள், தங்கள் அரண்மனையை வைக்கோலால் நிரப்பிவிடுவர். அதுவும் எப்படி, ஆள் நுழைய முடியாத அளவுக்கு. ஆனால், பாண்டவர்களோ வேறொரு வழிமுறையைக் கையாள்வார்கள். அரண்மனை முழுக்க விளக்குகளை ஏற்றி விடுவார்கள். விளக்குகளின் ஒளி அரண்மனையையே நிறைத்துவிடும். அழகும் தெய்விகமும் கலந்து அரண்மனை விளக்கொளியில் ஜொலிக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பாண்டவர்களுக்கே... விளக்கின் மகிமை அப்படி!

தீப ஒளிதான் தீபாவளியானது. தீபங்களின் ஒளியில், வீட்டின் அழகை இன்னும் கூட்டும் திருநாளே தீபாவளி. எந்தவொரு சுபகாரியத்துக்கும் சாட்சியாக இருப்பவை தீபங்களும் அவற்றை ஏந்தி நிற்கும் விளக்குகளும்தான். வீட்டில் நடைபெறும் சின்ன விசேஷம் தொடங்கி திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல விழாக்களிலும் குத்துவிளக்கில் தீபம் ஏற்றியே விழா தொடங்கப்படுகிறது. திருமணச் சீரின் முதல் பொருளாக இடம்பெறுவதும் குத்துவிளக்குகளே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick