படங்கள் உதவி: ஞானம்

நாகராஜகுமார் - படங்கள்: கே.ராஜசேகரன், மீ.நிவேதன்

தியேட்டர் வாசலில் விற்கப்படும் திரைப்படப் பாட்டுப் புத்தகங்களை வாங்கிய அனுபவம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அந்தப் புத்தகங்களுடன் அன்றைய ஹீரோ ஹீரோயின்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் பரப்பி வைத்திருப்பார்கள். அவற்றில் தங்களுக்குப் பிடித்தவர்களின் புகைப்படத்தை வாங்கி மிகப் பாதுகாப்பாக வைத்திருந்த பலர் இன்றும் இருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி ஆரம்பித்த பழக்கத்தின் தொடர்ச்சியாக, இன்று கிட்டத்தட்ட எட்டு லட்சம் புகைப்படங்களைச் சேர்த்து, அவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாத்துவருகிறார் `ஞானம்’ என்கிற ஞானபிரகாசம்.

சென்னை, மந்தைவெளியில் இந்தப் புகைப்படங்களைப் பாதுகாப்பதற்காகவே தனி வீடு அமைத்து, வீட்டில் இருக்கும் ரெஸ்ட் ரூம் தவிர மற்ற அறைகளில், பார்க்கிற இடங்களில் எல்லாம் புகைப்படங்களையும் அவற்றுக்குண்டான பெட்டிகளையும் அடுக்கடுக்காக அடுக்கிவைத்திருக்கிறார். எந்தப் படம், எங்கிருக்கிறது என்பது ஞானத்துக்கு மட்டும்தான் தெரியும்போல. நாம் பார்க்கிற எல்லா இடங்களிலும் படங்கள்... படங்கள்..! சினிமா ஸ்டில்களைத் தவிர, படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ், தனி நபர்களின் ஸ்டில்ஸ், நிகழ்ச்சிகளின் ஸ்டில்ஸ்... ஸ்டில்ஸ்... ஸ்டில்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick