கம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை!

மா.பாண்டியராஜன்

கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கேமராவுக்குள் சிறைப்பட விரும்பாத செலிபிரிட்டிகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல செலிபிரிட்டிகளின் மோஸ்ட்  வான்ட்டட் கேமராமேன். இவர் கடந்துவந்த பாதையையும் அந்தப் பாதையில் இவர் எடுத்த அரிய படங்களின் தொகுப்பும் இங்கே...

``கார்த்திக் ஸ்ரீனிவாசன் எப்படி செலிபிரிட்டி போட்டோகிராபரானார்..?’’

``அது ஒரு பெரிய ட்ராவல் ப்ரதர். தேனிக்குப் பக்கத்துல இருக்கும் கம்பம்தான் என் சொந்த ஊர். நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தப்போ, எங்க அப்பா வாங்குற சில சினிமா புத்தகங்களைப் படிப்பேன். அந்தப் புத்தகங்கள்ல இருந்த புகைப்படங்கள் என்னை ஈர்த்துச்சு. நடிகர்கள் எப்படி போஸ் கொடுக்குறாங்க, போட்டோ எப்படி எடுத்திருக்காங்கன்னே யோசிச்சுக்கிட்டு இருப்பேன். சரி நாமும் போட்டோ எடுக்கலாமேனு ஒரு நாள் தோணுச்சு. அது டிஜிட்டல் கேமரா வராத காலம்; ஃபிலிம் கேமராதான். அதுல போட்டோ எடுத்து, டெவலப் பண்ணிப் பார்க்கும்போது பல நேரங்கள்ல அதுல எதுவுமே இருக்காது. இப்படிப் பல சிக்கல்களுக்கு நடுவுலதான் நான் போட்டோகிராபி கத்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல எல்லா போட்டோகிராபர்களையும்போல மலை, பூ, செடினு இயற்கையில் இருந்துதான் நானும் ஆரம்பிச்சேன். நாளாக ஆகத்தான் எனக்கு அந்த ஸ்டைல் போட்டோகிராபி எனக்கானது இல்லைனு தெரியவந்துச்சு. செலிபிரிட்டிகளை போட்டோ எடுக்கணும், லைட்டிங் செட் பண்ணி போட்டோ எடுக்கணும், பேப்பர்ல வர்ற விளம்பரங்கள் மாதிரி போட்டோ எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைக்கிற எதையுமே எங்க ஊருல இருந்து செய்ய முடியாது. அதனால எங்க மாமாவோட உதவியால சென்னைக்கு வந்து சில சினிமாப் பிரபலங்கள்கிட்ட அறிமுகமானேன். அவங்ககூட இருக்கும்போது நிறைய ப்ரீமியர் ஷோஸ் பார்ப்பேன். பல சினிமாப் பிரபலங்களை நேரில் பார்க்க முடிஞ்சுது. அப்போ, போட்டோகிராபி ப்ளஸ் சினிமாடோகிராபியும் பண்ணணும்னு ஆசை வந்தது. அந்த ஆசையை விடாம கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு `ஊமை விழிகள்’ படத்தோட ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார்கிட்ட கொஞ்ச நாள் வேலை பார்த்து, சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick