பயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா | Organic Farmer Kodumudi Dr.K.Natarajan interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

பயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா

பொன்.செந்தில்குமார், படங்கள்: நா.ராஜமுருகன்

‘கொடுமுடி  டாக்டர்.கே.நடராஜன்’ என்ற பெயரை இப்போது கூகுளில் தட்டினால், முழு முகவரியையும், யூடியூப் வீடியோக்களையும் அள்ளிக்கொட்டுகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் வசிக்கிறார் டாக்டர் நடராஜன். இவருடைய அரிய கண்டுபிடிப்பான `பஞ்சகவ்யா’ விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே கிடைத்த வரப்பிரசாதம். அவரைச் சந்தித்துப் பேசினோம். தொடக்கத்திலேயே நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறார் டாக்டர் நடராஜன்...

``பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எதிரில் உள்ள மனுஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவம் பார்க்கிறேன். முடிந்த வரை நோய்க்கு ஆயுர்வேதம், சித்த மருத்துவத் தீர்வுகளைச் சொல்வேன். நோயாளி ஏற்றுக்கொண்டால், நம் பாரம்பர்ய மருத்துவத்தைச் செய்வேன்; விருப்பமில்லை என்று சொல்பவர்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் நடராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick