இது கிராபிக் தாண்டவம்! | Abhishek Singh - 3D designer, engineer & educator - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

இது கிராபிக் தாண்டவம்!

கார்க்கிபவா

பிஷேக் சிங்... உலக அளவில் மிக முக்கியமான கிராபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட். நவீனமும் புராதனமும் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றிணையும் இடமே அபிஷேக்கின் பணி வெளி. மும்பை, நியூயார்க், புரூக்லின் நகரங்களுக்குப் பறந்தபடி வாழ்ந்துவருகிறார் அபிஷேக். மின்னஞ்சல் மூலமே அவரிடம் பேச முடிந்தது. அதிலிருந்து...

``உங்களைப் பற்றி... இன்று நீங்கள் அடைந்திருக்கும் இடத்தை எப்படிப் பிடிக்க முடிந்தது?’’

``மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பிறந்து வளர்ந்தேன். என் பாட்டியின்மூலம் சின்ன வயதிலிருந்தே கிராமிய, புராணக் கதைகளைக் கேட்டபடியும் காமிக் புத்தகங்களைப் பார்த்தபடியும் வளர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அந்த வடிவங்களின்மீது பெரும் காதல் கொண்டிருந்தேன். சுவரில் மணிக்கணக்கில் நான் வரைவதைப் பார்த்த என் அப்பா, டிராயிங் புத்தகத்தையும் ஸ்கெட்ச் பென்சில்களையும் வாங்கிக் கொடுத்தார். அன்று தொடங்கிய பயணம், இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick