ஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்!

யாழ் ஸ்ரீதேவி, படங்கள்: எம்.விஜயகுமார்

சேலத்திலிருந்து 30 நிமிடப் பயணத்தில் இருக்கிறது ஆட்டையாம்பட்டி. சாலையின் இரண்டு புறங்களிலும் புளியமரங்கள் அடர்ந்து நின்று சாமரம் வீசும் கிராமம். விவசாய பூமியும் கால்நடைகளும் நம் கண்களை நலம் விசாரிக்கும். முகவரி கேட்டால், வீடுவரை கரம்பிடித்து வழிகாட்டும் வெள்ளந்தி மக்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கைமுறுக்கு பிசினஸில் வெற்றிக்கொடி கட்டிவரும் சாம்ராஜ்ஜியம்.

ஆட்டையாம்பட்டியின் வழியில் எந்த வாகனத்தில் பயணிப்பவராக இருந்தாலும், இங்கு முறுக்கு வாங்காமல் கடப்பதில்லை. இன்றைக்கும்கூட இங்கு விற்பனையாகும் கைமுறுக்கின் விலை ரூபாய் ஒன்றுதான் என்பது, ஆச்சர்யம். உற்பத்தியாளர்களிடம், உற்பத்தியிடத்திலேயே வாங்குவதால் இந்த விலை, கட்டுப்படியாகிறது. ஆட்டையாம்பட்டியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகளில் குடிசைத்தொழிலாக கைமுறுக்கு, தட்டுவடை மற்றும் அதிரசம் ஆகியவை தயாராகின்றன. எந்தப்  பதப்படுத்தும் பொருள்களும் பயன்படுத்தப்படாத நொறுக்குத்தீனிகள். அன்றன்றைக்குத் தயாராகும் ஸ்நாக்ஸ் அன்றைக்கே விற்பனையாகிவிடும். ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிட்டாலும் சுவை மாறாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick