கூர்க்... இந்தியாவின் ஸ்காட்லாந்து

ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

ங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகும்போது அதிலிருந்து உங்களை மீட்டு, புத்துணர்வு அடையச் செய்ய இயற்கையால் மட்டுமே முடியும். அதுவும் மாசுபடாத இயற்கையாக இருந்தால், அது கொடுக்கும் புத்துணர்ச்சியே தனி. அப்படிப்பட்ட ஓர் இடம்தான் `குடகு’ என அழைக்கப் படும் கூர்க்.

கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்வதாக இருந்தாலும், இதமான குளிரில் இன்பமாக ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தாலும் உங்களுக்கான சரியான சாய்ஸ் கூர்க்தான். ஏனென்றால், இங்கு அதிரடி குளிரும் இல்லை; ஆர்ப்பாட்டமான வெயிலும் இல்லை. மிதமான குளிர்ச்சி நம்மைத் தழுவிக்கொண்டே இருக்கிறது. `இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்றே கூர்க்கை அழைக்கிறார்கள். ஸ்காட்லாந்தின் அதே இயற்கை அழகு; அதே வசீகரிப்பு; அதே தட்பவெப்பம் கொண்டது கூர்க். எங்கு திரும்பினாலும் பசுமையான மலைகள், சிலிர்க்க வைக்கும் அருவிகள், மணக்கும் காபி தோட்டங்கள்... என இயற்கை நம்மை ஈர்க்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்