வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முகில், ஓவியம்: செந்தில்

‘தலையில் மிளகாய் அரைப்பது’ என்ற வார்த்தைகளுடன் ஒரு கட்டுரையை ஆரம்பிக்கக் கூடாதுதான். ஆரம்பித்துவிட்டேன்; மன்னிக்கவும். அதன் அர்த்தம் என்னவென்று நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஏமாற்றுவதை மிளகாய் அரைப்பதோடு ஒப்பிடும் வழக்கம் எப்படி வந்திருக்கும்? கட்டுரையின் இறுதி வரிகளில் காரணத்தைப் பார்ப்போம். தற்போது எழுத்து எனும் கால எந்திரம் ஏறி, நம் முன்னோர் காலத்துக்குச் செல்வதற்குத் தயாராவோம். தக்காளி, வெங்காயம், மிளகாய் இருந்தால் போதும்; ஏதாவது சமைத்துவிடலாம் என்பது இன்றைய ஃபாஸ்ட் புட் யுகச் சமையல் ஸ்டைல். வெங்காயம் சில ஆயிரம் ஆண்டுகள் நம்மிடையே புழக்கத்தில் இருந்தாலும், அதன் பூர்வீகம் நம் மண் கிடையாது. மிளகாய் எல்லாம் நம் மண்ணுக்கு வந்தேறி. தக்காளி என்பது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் நம்மீது திணித்ததே.

எனில், பண்டைத் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்ன காய் சமைத்திருப்பார்கள்? நம் தமிழ் மன்னர்களின் உணவாக என்ன இருந்திருக்கும்? அருந்தமிழ்த் தொண்டாற்றிய ஔவைக்கும், பரிசில் பெறச் சென்ற பாணர்களுக்கும் என்ன பரிமாறப்பட்டிருக்கும்? தாகத்துக்கு என்ன பருகியிருப்பார்கள்? இன்னும் பல கேள்விகள் எழலாம். சில நூறு பக்கங்களுக்குப் பேச வேண்டிய விஷயம் இது. சில நூறு வார்த்தைகளில் சமைக்க முயல்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick