அசரவைக்கும் அதிரப்பள்ளி பயணம்..! | Travel to athirappilly falls - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

அசரவைக்கும் அதிரப்பள்ளி பயணம்..!

தி.ஜெயப்பிரகாஷ் - படங்கள்: சே.அபினேஷ்

மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற பைக் ரைடிங் கலாசாரம், சமீபகாலமாக இந்தியர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது. பரபரப்பான இந்தியச் சாலைகளில் பதற்றமே இல்லாமல் தேசாந்திரியாகச் சுற்றித்திரியும் பைக் ரைடிங் குழுக்கள் நாள்தோறும் நம்மைக் கடந்துசெல்கின்றன. பைக் ரைடிங் பயணத்தில் புத்துணர்வு தேடி அலையும் இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வழித்தடங்கள் நம் நாட்டில் இருந்தாலும், இயற்கையின் அரவணைப்பில் இணைந்துகொண்டு பயணிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாலைகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதிலும், பல ஆயிரம் கிலோ மீட்டர் விஸ்தரித்துக் கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழக - கேரள எல்லைகளை இணைக்கும் வால்பாறை - அதிரப்பள்ளி மலைப்பாதை, தற்போது பைக்கர்களின் மத்தியில் செம ட்ரெண்ட். இந்திய பைக் ரைடிங் வெறியர்களைக் கவர்ந்திழுக்கும் இந்த வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் அப்படி என்னதான் இருக்கிறது?  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick