கமகமக்கும் மதுரை பருத்திப்பால்!

சே.சின்னதுரை - படங்கள்: பா.ராகுல்

துரை என்றாலே, பருக `குளு குளு ஜிகிர்தண்டா’ என்று உச்சுக்கொட்டுவார்கள். அதைத் தவிர இன்னும் சில பானங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பருத்திப்பால். மதுரை, முனிச்சாலையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பருத்திப்பால் வியாபாரம் செய்கிறார் `பருத்திப்பால்’ சந்தானம். அவரிடம் பேசினோம்...

 ``என் அப்பா காலத்தில் ஆரம்பிச்சது. எனக்கும் என் பையனுக்கும் இதுதான் தொழில். என் மனைவி, மகன், மருமகள் என அனைவரும் சேர்ந்துதான் இந்தப் பருத்திப்பால் வியாபாரத்தை நடத்திவருகிறோம். பருத்திப்பால் என்றவுடன் வெல்லம், சீனி, எசென்ஸ் கலந்து செய்யும் இந்தக்காலப் பருத்திப்பால் என்று நினைத்துவிட வேண்டாம். கமகமக்கும் தித்திப்பான, திக்கான மஞ்சள் நிறத்தில் இருக்கும் கருப்பட்டிப் பருத்திப்பால். இதில் சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை, கருப்பட்டி, திப்பிலி, தேங்காய் போன்ற இயற்கைப் பொருள்களைக் கலந்து `உணவே மருந்து’ என்ற பாணியில் பருத்திப்பாலைத் தயாரிக்கிறோம். எங்கள் குலதெய்வத்தின் பெயரைத்தான் இந்தக் கடைக்கும் வைத்திருக்கிறோம்... `திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை.’ இந்தப் பருத்திப்பால் வியாபாரத்தை ஒரு சேவை மனப்பான்மையோடுதான் செய்துவருகிறோம். சர்க்கரையோ, வெல்லமோ கலப்படம் இல்லாமல், ஒரிஜினல் பனங்கருப்பட்டியைக்கொண்டுதான் தயாரிக்கிறோம்'' என்றவர், பருத்திப்பால் செய்முறையை விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்