உறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை! | Spiritual Belief Behind Azhagar Temple samba dosa - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

உறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை!

சே.சின்னதுரை - படங்கள்: பா.ராகுல்

சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள். ஆனால், வளர்ந்தவர்கள் சண்டை போட்டுப் பிரிந்துவிட்டால், அவர்கள் மறுபடியும் ஒன்றுசேருவது சற்றுக் கடினம். குடும்பத்தில், உறவினர்களுக்கிடையில், நண்பர்களுக்கிடையில் ஏதோ ஒரு காரணத்துக்காகச் சண்டை வந்து, சம்பந்தப்பட்டவர்கள் மனவருத்தத்துடன் பிரிந்துவிடுவது உண்டு. அப்படிச் சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் அன்புப் பிணைப்போடு ஒன்று சேருவதற்கென்றே ஒரு கோயில் இருக்கிறது.

மதுரை அழகர்கோவில்தான், அந்தக் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை, மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும் தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள, மதுரை அழகர்கோவிலுக்கு நேரில் சென்றோம்.

கோயிலுக்கு வந்திருந்த பக்தர் சேவுகமூர்த்தி என்பவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick