விநோத வேலைகள்

தி.முருகன்

க்யூவில் நிற்பவர்!

ம் தேசம் மட்டும்தான் பண மதிப்பிழப்பு, டிரைவிங் லைசென்ஸ் சர்ச்சை என திடீர் க்யூக்களைத் தோற்றுவித்து மக்களை வீதியில் நிற்கவைக்கும் என்றில்லை. தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் வல்லமை பெற்ற நாடுகளிலும் க்யூக்கள் உள்ளன.

ஆப்பிளின் புதிய ஐபோன் ரிலீஸ் ஆகிறது என்றால், முந்தின நாள் இரவிலிருந்தே ஸ்டோர் வாசலில் க்யூ நிற்கும். வார இறுதி நாள்களில் புகழ்பெற்ற நாடகம் ஒன்று நடைபெற உள்ளது என்றால், அதற்கான டிக்கெட்டுக்கு அடிதடியே நடக்கும். சில விமான நிறுவனங்கள் சலுகை விலையில் டிக்கெட்களை விற்கும். அதற்காகவும் க்யூ கூடும். நீதிமன்றங்களில் முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, சட்ட நிறுவனங்கள் தங்கள் பிரதிநிதிகளை நீதிமன்ற அறைக்கு அனுப்புவதற்கான பாஸ் பெறுவதற்கு க்யூவில் நிற்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்