பட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்!

கார்க்கிபவா

புரிம் திருவிழா (Purim Festival) - இஸ்ரேல்

அஹாசுரஸ் என்ற பாரசீக மன்னர் ஒருவர் இருந்தார். அவரது அரசவையில் ஹமான் என்ற கொடூர அமைச்சன் ஒருவன் இருந்தான். அவன், நாட்டில் இருந்த அத்தனை யூதர்களையும் கொல்லத் திட்டமிட்டிருந்தான். அரசனுக்கு எதிராக அவர்கள் திரள்கிறார்கள் என்பது அவன் எண்ணம். அவனிடமிருந்து மக்கள் காப்பாற்றப்பட்ட நாளையே புரிம் திருவிழாவாக இன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வாழும் யூதர்கள் கொண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட நரகாசுரன் கதை நினைவுக்கு வருகிறதா? உண்மைதான். ஆனால், இது உண்மையாக நடந்த வரலாறு என்பதுதான் சின்ன வித்தியாசம். இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், பட்டாசுகளும் வாண வேடிக்கையும்தான் ஹைலைட். நாடு முழுக்க மக்கள் திரள் திரளாகப் பேரணி நடத்துவார்கள். நினைத்த இடத்தில்  நெருப்பை ஏற்றுவார்கள், பட்டாசு வெடிப்பார்கள். யூதர்களின் புனித விஷயங்களில் புரிம் திருவிழாவும் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick