‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்!

தியாகராஜர் 250பாலு சத்யா - படங்கள்: கே.குணசீலன்ஓவியங்கள்: ம.செ

`சந்திரனைப் பழிக்கும் எழிலுடைய சீதாதேவியே... லட்சுமணனே! நீங்கள் இருவரும் ஸ்ரீராமபிரானின் இருபுறமும் நின்றுகொண்டு சேவை செய்யும் தத்துவத்தை அன்புகூர்ந்து எனக்கு விவரமாகச் சொல்லக் கூடாதா? தேகத்தால் வணங்குகிறீர்களா, நாவினால் நாம கீர்த்தனம் செய்கிறீர்களா அல்லது மனதில் தியானித்துப் பரவசம் அடைகிறீர்களா?’ - இப்படி ஒரு கேள்வியை `பக்கல நிலபடி கொலிசே...’ கீர்த்தனையில் கேட்கிறார் தியாகராஜர். சதா சர்வகாலமும் ராம சிந்தனை... ராமபக்தி! ஆனாலும், ராமபிரானின் மேல் தான் கொண்டிருக்கும் பக்தி குறைவானதோ என்கிற சந்தேகம். அற்புதமான சொல்லாடல், கவித்துவம், தேர்ந்தெடுத்த ராகத்துக்குப் பொருத்தமாக, கச்சிதமாக வந்தமரும் பாடல் வரிகள்... நினைக்க நினைக்க மலைக்கவைக்கிறார் தியாக பிரம்மம். அப்படிப் பிரமிக்கவைக்கும் பாடல் வரிகளுக்குக் காரணம், அவர் மேற்கொண்ட நாதோபாசனை. அதாவது, இசை வழியாக இறைவனை வழிபடுதல், பக்தி செலுத்துதல். `தியாகய்யா’ என்கிற தியாகராஜர் `கர்னாடக இசையின் இசை மும்மூர்த்திகள்’ என அழைக்கப்படும் மூவரில் முக்கியமானவர். மற்ற இருவர் ஷ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர். தியாகராஜர் பிறந்த 250-ம் ஆண்டில் நாம் இருக்கிறோம். ஆனால், இன்றைக்கும் புதிதாக, கேட்கக் கேட்கத் தெவிட்டாததாக, பக்தி என்கிற கடலுக்குள் நம்மை மூழ்கச் செய்வதாக இருக்கின்றன அவரது கீர்த்தனைகள். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கில் எழுதப்பட்டவை. சில சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick