அழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்! | Spiritual information about Lord Murugan and his Peacock - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

அழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்!

பூசை ச.அருணவசந்தன்

முருகன் என்றாலே அழகன்தானே! அழகென்ற சொல்லுக்குப் பொருளான முருகப் பெருமானின் வாகனமும் அழகாக இருந்தால்தானே முருகனின் அழகுக்கு அழகு சேர்ப்பதாகத் திகழும்?! அதனால்தான் மற்ற தெய்வங்களுக்கெல்லாம் இல்லாத வகையில், முருகப்பெருமானின் வாகனமாக மயில் அமைந்துள்ளது.

முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பவனிவருகின்றான். புராணங்களின்படி முருகப்பெருமானுக்கு முதலில் வாகனமாகும் பேறுபெற்றது ஆடுதான். அதன் பிறகே குதிரை, யானை ஆகியவற்றையும் அவர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.

சூரனுடன் நடந்த போர்க்களத்தில் இந்திரன், மயில் வடிவம்கொண்டு முருகனைத் தாங்கினான். போரின் இறுதியில் முருகன் மருத மரமாக நின்ற சூரனை இரண்டாகப் பிளந்தார். அது, மயிலாகவும் சேவற் கொடியாகவும் ஆனது. அவற்றை முருகன் ஏற்றுக்கொண்டான். அது முதல் அவனுக்கு நிலைத்த வாகனமாக மயில் இருந்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick