எங்கேயோ இப்ப மூன்று மணி | Muthulingam A - Short Story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

எங்கேயோ இப்ப மூன்று மணி

அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: செந்தில்

நான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க்கையை மாற்றப்போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன. சந்திரசேகரம் உள்ளே நுழைந்துவிட்டதால் ஆபத்து இல்லை என்று பட்டது. கட்டுநாயக்கா விமான நிலையம் பரபரப்பாக இயங்கியது. எனக்கு முன் நிற்பவனின் பெயர் பத்மநாதன். எனக்குப் பின்னால் நிற்பவனின் பெயர் சுதாகரன். குடிவரவு அதிகாரியின் முகம் சிநேகமானதாகத்தான் தென்பட்டது. அடிவயிற்று நடுக்கத்தைக் குறைத்து, சாவகாசமாக நிற்க எத்தனித்தேன். எங்களைக் காட்டிக்கொடுப்பதென்றால், அது சுதாகரனால்தான் நடக்கும். அவனுடைய கைவிரல்கள் நடுங்குவதை என் கடைக்கண்ணால் பார்க்க முடிந்தது.

2005-ம் ஆண்டில் நான் போன முதல் பயணத்தில் இப்படியான பிரச்னைகள் இல்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இப்போது பயணம். அனுராதபுரம் எல்லாளன் படை நடவடிக்கைக்குப் பின்னர் விமான நிலையத்தில் கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டிருந்தன.  வழக்கமான கேள்விகள்தான். பிரேசில் நாட்டுக்குச் சென்று கப்பலில் சேரப் போவதாக ஏஜென்ட் சொல்லித் தந்த மாதிரியே சொன்னேன். அதிகாரி நம்பிவிட்டார். என் கடவுச் சீட்டில் எட்டாம் பக்கத்தில் கையில் வைத்திருந்த ஸ்டாம்ப்பால் ஓங்கிக் குத்திவிட்டு, கடவுச்சீட்டை என் பக்கம் தள்ளினார். நான் கடவுச்சீட்டைக் கையில் எடுத்த பின்னர், ``நன்றி’’ என்று மெதுவாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். மூன்று பேர் இப்போ உள்ளுக்கு நுழைந்துவிட்டோம். சுதாகரன் ஒருவன்தான் மிச்சம். அவனும் தப்பிவிட்டால் கனடா நாடு என் வரவால் சிறப்படையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick