“நிறைவான வாழ்க்கைக்காக சந்தோஷப்படுகிறேன்!” - விஜயகுமாரி | I am happy with this perfect life - veteran actress Vijayakumari - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“நிறைவான வாழ்க்கைக்காக சந்தோஷப்படுகிறேன்!” - விஜயகுமாரி

சினிமா

`காப்பியத் தலைவியாக இருந்த கண்ணகியை, தமிழ் மக்கள் பெருவாரியாக அறிய `பூம்புகார்' திரைப்படத்தில் கலைஞரின் வசனம் ஒரு காரணம் என்றால், அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த விஜயகுமாரி மற்றொரு காரணம். தன் அழகுத் தமிழ் உச்சரிப்பால், தமிழ் சினிமா வரலாற்றில் தடம்பதித்தவர். சென்னையை அடுத்த பாலவாக்கத்தில், கடற்கரைக்கு அருகே உள்ள வீட்டில் வாழ்க்கையை இனிதே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீட்டின் வரவேற்பறையில், ஆளுயர `கண்ணகி' புகைப்படத்துக்குக் கீழே சாந்தமாக அமர்ந்திருந்தவர், நம்மைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றார்.

சினிமாப் பயணம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடனான காதல், அந்தத் திருமண உறவில் விரிசல், உடன்பிறவா சகோதரர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருடனான அன்பு மற்றும் இன்றைய வாழ்க்கை குறித்து மனம் திறக்கிறார்.