“சாந்தி தியேட்டரும் சத்தியமூர்த்தி பவனும்!” | Interview with director, producer and comedian actor Manobala - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“சாந்தி தியேட்டரும் சத்தியமூர்த்தி பவனும்!”

சினிமா

``என் உண்மையான பெயர் பாலசந்தர். இயக்குநர் கே.பாலசந்தரின் ஊரான நன்னிலம் அருகில் இருக்கும் மருங்கூர்தான் என்னுடைய சொந்த ஊர். ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளராக ‘ஃபிலிமாலயா’ பத்திரிகையில் எழுதும்போதுதான் பாலசந்தர் என்ற பெயரை ‘மனோபாலா’ என மாற்றிக்கொண்டேன்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக விகடன் தீபாவளி மலரைத் தவறாமல் வாசித்து வருபவன், இன்று அதே தீபாவளி மலருக்குப் பேட்டி அளிப்பதை, எனக்குக் கிடைத்த கெளரவமாக நினைக்கிறேன்!''-மனோபாலாவின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். `ஆகாய கங்கை' முதல் `நைனா' வரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 900-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர். பத்திரிகையாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மனோபாலாவிடம் பேசியதிலிருந்து...

நீங்க எப்படி பீல் பண்றீங்க