ஜோக்கர், நிஜ வாழ்க்கையில் எப்படி? - குருசோமசுந்தரம் | Interview with actor Guru Somasundaram - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ஜோக்கர், நிஜ வாழ்க்கையில் எப்படி? - குருசோமசுந்தரம்

``என் மனைவி பேர் ருத்ரா. அவங்களைப் பாசமா கருவாச்சினுதான் கூப்பிடுவேன். நான் நடிக்கிறதைவிட ரொம்ப அழகா அவங்களும் நடிப்பாங்க. குழந்தைகளைப் பார்த்துக்கணும்னு நடிப்பை விட்டு விலகியிருக்காங்க!'' - மனைவிக்கு முதல் மரியாதை கொடுத்துப் பேசத் தொடங்குகிறார், `ஜோக்கர்' ஹீரோ குருசோமசுந்தரம்.

``காதல் திருமணம் செய்துகிட்ட ஜோடி நாங்க. திருமணம் முடிஞ்சு பல வருடங்கள் ஆகிடுச்சு. ஆனா, இன்னும் எங்களுக்குள்ள இருக்கிற காதலும் நட்பும் கொஞ்சமும் குறையவே இல்லை. அதுக்குக் காரணம், எங்களுக்குள்ள எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாததுதான்.

பரபரப்பான லைஃப் ஸ்டைல் வாழ்க்கையில் எனக்கு உடன்பாடில்லை. கிராமத்திலிருந்து நடிக்க வந்தவர்கள்கூட, சினிமாவில் வாய்ப்பு கிடைச்சா, சென்னையில் செட்டில் ஆயிடுவாங்க. ஆனா, எனக்கு எப்போவுமே இயற்கை சார்ந்த சூழலில் வாழ்வதுதான் பிடிக்கும். என்னைப்போல ஒத்த சிந்தனை கொண்டவள் என் மனைவி ருத்ரா. இயற்கையை நேசிப்பவர். அதனால், திருவண்ணாமலையில் எங்களுக்கான வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். வாடகை ரெண்டாயிரம் ரூபாய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க