ரியல் சாந்தி ரீல் ரமா! | Interview With Actress Rama - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ரியல் சாந்தி ரீல் ரமா!

சினிமா

யக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட `ஆர்' வரிசை நடிகைகளில் ஒருவர், ரமா. கதாநாயகியாக இரண்டு படங்களில் மட்டுமே நடித்தவர், பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது எதார்த்தமான அம்மா கதாபாத்திரங்களில் கலக்கிவருகிறார். `என் புள்ளைக்கு என்ன கொறச்சல்' என `மெட்ராஸ்' படத்தில் உரக்கப் பேசும் அம்மா, `எப்படி இருக்க... சாப்டியாப்பா?' என `கத்தி' படத்தில் கசிந்துருகும் அம்மா என வெரைட்டி காட்டுகிறார். ``நான் நடிகைங்கிறதே எங்க அப்பார்ட்மென்ட்ல பலருக்கும் தெரியாது. அப்படி இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். நிஜ வாழ்க்கையில நடிகைக்கு உண்டான எந்தச் சாயலும் எங்கிட்ட தெரியாது'' என மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார், ரமா.