“இந்த சந்தோஷங்கள் தொடரணும்!” - ப்ரியா பவானி சங்கர் | Interview with actress Priya Bhavani Shankar - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“இந்த சந்தோஷங்கள் தொடரணும்!” - ப்ரியா பவானி சங்கர்

சினிமா

``அப்பாவுக்கு சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை. அதனால, வருஷா வருஷம் புது ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வரும். அப்படி, ஒன்பதாவது படிக்கும்போது சென்னைக்கு வந்தோம். இப்பவரை சென்னைவாசம்தான். இன்ஜினீயரிங் படிக்கும்போதே பார்ட் டைம் ஜாப் பார்க்க ஆரம்பிச்சேன். ஜீ தமிழ் டி.வி-யில்தான் முதல் வேலை. நைட் பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் ‘டாப் 10 நியூஸ்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர். என் முதல் சம்பளம் 600 ரூபாய். வண்டலூர்ல உள்ள காலேஜ்ல இருந்து தி.நகர்ல உள்ள சேனலுக்குப் போயிட்டு வர்றதுக்கே அந்தப் பணம் சரியாப்போயிடும். அதைத் தவிர, எனக்கான மேக்கப் பாக்ஸ், காஸ்ட்டியூம்னு வரவைவிடச் செலவு அதிகமா இருந்த காலம்...” பழைய நினைவுகளில் மூழ்குகிறார் பிரியா பவானி சங்கர். நியூஸ் ஆங்கர், சீரியல், சினிமா என்று பரபரப்பாக வலம்வருகிறார் பிரியா. தற்போது ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருப்பவர், தன் டி.வி, சினிமா அனுபவத்தைப் பகிர்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க