“சைதன்யா, எனக்காக நிறைய விட்டுக்கொடுக்கிறார்!” - சமந்தா | Actress Samantha interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“சைதன்யா, எனக்காக நிறைய விட்டுக்கொடுக்கிறார்!” - சமந்தா

சினிமா

ம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. இருப்பினும் தன்னைத் `தமிழ்ப் பொண்ணு' என அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புபவர், நடிகை சமந்தா. திருமணமாகியும் `நடிகையர் திலகம்', `ரங்கஸ்தலம்', `இரும்புத்திரை' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  ``அழுகை யதார்த்தமா இருக்கணும்ங்கிறதுக்காக நடிக்கும்போது நான் கிளிசரின் பயன்படுத்தியது கிடையாது. நடிப்புன்னா அந்த அளவுக்குப் பிடிக்கும். அதனால, கல்யாணத்துக்கு அப்புறம் என்னால நடிக்காம இருக்க முடியல!'' என்றவர், கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

``எல்லோரும் கல்யாணத்துக்கு அப்புறம் சமந்தா பர்ஃபாமென்ஸ் அடிப்படையிலான கதாபாத்திரங்களை நோக்கிப் போறாங்கனு பேசிக்கிறாங்களே. உங்களோட கதைத் தேர்வுகள் எப்படி இருக்கு?''

``நான் சினிமாவுக்குவந்து எட்டு வருடங்கள் ஆச்சு. கமர்ஷியல் படங்கள், கலைப் படங்கள்னு எல்லாவிதமான படங்களிலும் நடிச்சிட்டேன். இனி, பெண்களை மையமா வெச்சு எடுக்கப்படும் படங்கள்ல கவனம் செலுத்தணும்னு நினைக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தவுடனேயே `யு-டர்ன்' மாதிரியான கதைகள்ல நடிச்சிருந்தா, யாருமே பார்த்திருக்க மாட்டாங்க. இப்போ சமந்தானா யாருனு எல்லோருக்கும் தெரியும். தனி ஆளா ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. இந்த நம்பிக்கையை மக்களுக்குக் கொடுக்குறதுக்கே எனக்குப் பல வருடங்கள் ஆச்சு. எனக்கு இப்போதான் பர்ஃபார்ம் பண்றதுக்கு அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் வருது. நடிக்க வந்ததுல இருந்து, கதைகளை நான்தான் முடிவு பண்றேன். இனியும் நான்தான் பண்ணுவேன்.''