“தமிழ் சினிமா போலித்தனமா இருக்கு” - அமலா பால் | Amala Paul interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“தமிழ் சினிமா போலித்தனமா இருக்கு” - அமலா பால்

சினிமா

`மைனா' படத்தின்மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். `காஸ்டிங் கவுச்', `பாலியல் வன்கொடுமை', `பர்சனல் வாழ்க்கை' என எந்தக் கேள்வி கேட்டாலும் அத்தனை நிதானமாக எதிர்கொள்கிறார், அமலா பால்.

``எங்களுக்குத் தெரியாத அமலா பால் பற்றிச் சொல்லுங்க...''

``நான் ரொம்ப ஹோம்லியான பொண்ணுன்னு பலருக்கும் தெரியாது. குடும்பத்தோட ரொம்ப இணக்கமா இருப்பேன். அம்மாவை மீறி நான் எதையும் செய்யமாட்டேன். என் பிறந்தநாளைக் குடும்பத்தோடதான் கொண்டாட நினைப்பேன். நண்பர்களோட அதிகமா வெளிய போறதில்லை. குறிப்பா, பார்ட்டிக்கு... நண்பர்களை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துதான் பேசுவேன். எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனாலும் ஃபிரீயா இருக்கும்போது, குடும்பத்தை அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப்போய்ச் சுத்திக்காட்டுவேன். எல்லாத்தையும் மிகைப்படுத்திப் பேசுறதுனால, என்னை `டிராமா குயின்'னு நண்பர்கள் சொல்வாங்க. கதை சொல்றது பிடிக்கும்; அடுத்தவங்களைப் பேசவிடாம, குறுக்கே பேசுறது பிடிக்கும்; டிராவல் பிடிக்கும். `அதெல்லாம் பண்ணக் கூடாது, ஆபத்து'னு சொன்னா, அதை ட்ரைப் பண்ணிப் பார்க்கப் பிடிக்கும். சுருக்கமா ஹிப்பி ஸ்டைல் பொண்ணு நான்.''