விமானத்தைத் தொட்ட விளம்பர யுக்தி! - `கலைப்புலி' எஸ்.தாணு | Kalaipuli S. Thanu interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

விமானத்தைத் தொட்ட விளம்பர யுக்தி! - `கலைப்புலி' எஸ்.தாணு

சினிமா

முதன்முதலாக கறுப்பு - வெள்ளப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து, சினிமாத் தொழிலில் காலடி வைத்தவர். பின்னர், படங்களின் உரிமையைப் பெற்று விநியோகஸ்தராக வளர்ந்தவர்.  `பைரவி' படத்தில் நடித்த ரஜினிக்கு, `சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வழங்கியவர்... இப்படியாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, பிரமாண்டமான தயாரிப்பாளராக வளர்ந்து நிற்பவர், `கலைப்புலி' எஸ்.தாணு. தனது சினிமாப் பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

``நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, வடசென்னை வண்ணாரப்பேட்டையில் குடித்தனம் இருந்தோம். அங்கே, பாம்பே ஹோட்டல் அருகில் பெரிய சுவரில், வண்ண வண்ண சினிமா போஸ்டர்கள் ஒட்டியிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்து, ஒருநாள் நாமும் இதேபோல் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்று கனவு காண்பேன்.

1970-ம் ஆண்டில் ஜெமினி, ஏவி.எம், வாகினி ஃபிலிம்ஸ், சுஜாதா ஃபிலிம்ஸ், சத்யா மூவீஸ் என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களே இருந்தன. பிறகு ஏ.எல்.சீனிவாசன், எஸ்.ஏ.ராஜகண்ணு, கே.ஆர்.ஜி ஆகியோர் சினிமாவுக்குள் நுழைந்தனர். அப்போது, சினிமா விளம்பரம் செய்வதில் வித்தகராகத் திகழ்ந்தவர், சிந்தாமணி முருகேசன். அவரைப் போலவே நாமும் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க