“நான் வியக்கும் ஒளிப்பதிவாளர் இயற்கைதான்!” - தேனி ஈஸ்வர் | Cinematographer Theni Eswar interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“நான் வியக்கும் ஒளிப்பதிவாளர் இயற்கைதான்!” - தேனி ஈஸ்வர்

சினிமா

``ஒளிப்பதிவுக்கலைக்கு நிரந்தர இலக்கணங்கள் கிடையாது. காலந்தோறும் எல்லாம் மாறுவதுபோல அதுவும் மாற்றத்துக்குரியது. நானும் மாற்றங்களை வரவேற்கிறவன். நகர்ந்துகொண்டே இருக்க விரும்புகிறவன்” - கண்ணாடிக்குள் சிரிக்கும் அவருடைய கண்களில் அவ்வளவு சந்தோஷம்; உற்சாகம். `அழகர்சாமியின் குதிரை', `தரமணி', ‘அச்சம் என்பது மடமையடா’, ‘மேற்குத் தொடர்ச்சிமலை', ‘பேரன்பு’, `நாச்சியார்' என மாறுபட்ட களங்களைக்கொண்ட சினிமாக்களை ஒளிப்பதிவு செய்தவர். இயக்குநரின் திரைக்கதைக்குள் தனது ஒளியால், நிழலால் கிளைக்கதைகளை எழுதிச்செல்லும் நுட்பமான ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை ஒரு காபி ஷாப்பில் சந்தித்தேன். கார் ஒன்று தன் மொத்த ஒளியையும் எங்கள்மீது வீசி, பின் நகர்ந்து சென்றது. “நல்ல தொடக்கம்!” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க