“நிஷா என் வாழ்வின் பொக்கிஷம்!” - கணேஷ் வெங்கட்ராம்-நிஷா

சின்னத்திரைமா.கிருபன்

டிகர் கணேஷ் வெங்கட்ராம் - `தலையணைப் பூக்கள்' நிஷா தம்பதிக்கு அறிமுகம் தேவையில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக்கொண்டிருக்கும் இருவரையும் சந்தித்துப் பேச ஆரம்பித்தவுடன், நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. கணேஷ் முதலில் ஆரம்பிக்கிறார்.

``என் பூர்வீகம் சிதம்பரம். ஆனா பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே மும்பை. எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் முடிச்சேன். ரெண்டு வருஷம் பிரைவேட் கம்பெனியில வேலை பார்த்தேன். அந்த வொய்ட் காலர் வேலை எனக்குப் பிடிக்கலை. அப்பா அம்மாகிட்ட சொல்லிவிட்டு, எனக்கு விருப்பமான மாடலிங் ஃபீல்டுக்குப் போனேன். 2003-ஆம் வருடம் `மிஸ்டர் இந்தியா' பட்டம் கிடைச்சது. ஆனா, எனக்குள் தமிழ்மீதும், என் பூர்வீகத்தின் மீதும் எப்போதும் அலாதியான பிரியம். அப்பா எங்க ஊரைப் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போது தமிழ்நாட்டுக்கு வந்துட்டுப் போவோம். தமிழ்நாட்டுக்கும் எனக்குமான தொடர்பு இவ்வளவுதான். ஆனால், சென்னைக்கு வரணும்னு ஆசை மட்டும் எப்போதும் உண்டு. 2006-ஆம் ஆண்டு விஜய் டி.வியில் `அமரன்' சீரியலில் மெயின் கேரக்டரில் நடித்தேன். பிறகு, ஜெயா டி.வியில் `மாயாவி' சீரியல் 3டி-யில் ஒளிபரப்பானது. அதிலும், நான் லீடு ரோல். 2007-க்குப் பிறகு மீண்டும் மும்பைக்குத் திரும்பிப் போயிட்டேன்.

எதார்த்தமாக `அபியும் நானும்' படத்துக்கான காஸ்டியூம் செலக்‌ஷனுக்காக ராதா மோகன் சாரும், பிரகாஷ்ராஜ் சாரும் வந்திருந்தாங்க. த்ரிஷா அவ்வளவு பெரிய ஸ்டார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார் ராதா மோகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்