மேற்குத் தொடர்ச்சிமலை ரங்கசாமி குடும்பத்தார்! | Merku Thodarchi Malai movie actor Antony family meeting - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

மேற்குத் தொடர்ச்சிமலை ரங்கசாமி குடும்பத்தார்!

சினிமா

சென்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல... தமிழ் சினிமாவுக்கும் தலைநகரம். சினிமாவைத் திரையில் பார்த்துப் பரவசப்படுவதுபோல அவ்வளவு சுகந்தமானதல்ல, திரைத்துறையில் வாய்ப்பு கிடைப்பது. எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாக் கனவுகளுடன் வந்திறங்கும் கிராமப்புற இளைஞர்களை சென்னை அனுதினமும் சந்திக்கிறது. அவர்களில்,  குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக வெவ்வேறு பணிகளைச் செய்தபடியே வாய்ப்புக்காகப் போராடுகிறவர்களின் பட்டியல் பெரிது. சினிமாவை  மட்டுமே நம்பிக்  காத்திருக்கும் அந்த முகங்கள், திரையில் அங்கீகாரம்பெறும் தினம் வரலாற்றில் முக்கியமானது. அத்தகைய எளிய கலைஞர்களின் வெற்றி, எந்தப் பின்புலமும் இல்லாமல் வாய்ப்பு தேடும் பல இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை வலுப்படுத்தும். அப்படியான ஒரு வெற்றிதான் ‘மேற்குத் தொடர்ச்சிமலை' வெற்றியில் வெளிச்சத்துக்கு வந்த நாயகன்தான் ஆண்டனி!