அன்பார்ந்த வாசகர்களே! | Editorial Page - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

அன்பார்ந்த வாசகர்களே!

வணக்கம்.

வ்வோர் ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்ட விகடன் தீபாவளி மலர், இப்போது உங்கள் கையில் தவழ்கிறது. பாரம்பர்ய விஷயங்களிலிருந்து விலகிச் செல்லாமலும், அதேசமயம் நவீன யுகத்தின் ஒவ்வோர் அம்சத்தைப் பதிவு செய்தபடியும், ஆண்டுதோறும் தன்னைப் புதுப்பித்தபடியே வருகிறது இந்த மலர். ஒவ்வொரு தீபாவளி மலரும் அன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்வதை நீங்களும் உணர்வீர்கள்.

இந்த ஆண்டு மலரில் அரசியல், ஆன்மிகம், இசை, இயற்கை, கலை, சினிமா, சின்னத்திரை, சுற்றுலா, பயணம், உணவு, வரலாறு, சிறுகதை, கவிதை, ஓவியம், நகைச்சுவை, நேர்காணல்கள் என ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறோம்.