“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன் | Poetry is the queen of Literature - Says Thamizhachi Thangapandian - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

நேர்காணல்

மிழ் இலக்கியத்தில், தமிழ் நிலத்தின் வாசனையைப் பரவச்செய்யும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர், தமிழச்சி தங்கபாண்டியன். நாம் மறந்தபோன தாவரங்களை, பூக்களை, பாத்திரங்களை, உறவுகளை, சொலவடைகளை இவரின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் காணமுடியும். `எஞ்சோட்டுப் பெண்', `வனப்பேச்சி', `மஞ்சணத்தி', `அருகன்' ஆகிய கவிதை நூல்களும் `பாம்படம்', `சொல் தொடும் தூரம்' ஆகிய கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. சென்னை, ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது, அரசியலில் களம் கண்டுவருபவரிடம் நடத்திய உரையாடல்...

``சுமதி, தமிழச்சி ஆன கதை என்ன?''

``நான் எழுத வந்தபோது `சுமதி' என்ற பெயரில் ஒரு கவிஞர், ஒரு நாவலாசிரியர் உட்பட சிலர் எழுதிக்கொண்டிருந்தனர். அதனால், எனக்கென ஒரு புனைபெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அது என் மண், மொழி, கிராமம் ஆகிய மூன்றையும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதால், `தமிழச்சி' என்று வைத்துக்கொண்டேன்.’’