விவசாயம், ஆன்மிகம் வழிகாட்டும் நவதர்ஷனம்

அனுபவம்

வீன நகர வாழ்க்கைமுறை கொடுத்துவரும் அழுத்தம், நாம் மீண்டும் பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்பிவிட முடியாதா என்ற ஏக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காகச் சுற்றுலா, சுற்றுப்பயணம், ஆன்மிகப் பயணம் என்று விதவிதமாகப் பயணிக்கிறார்கள் மக்கள்.  ஆனால், அதைவிடச் சிறந்தது, ஒரு மனிதன் உள்ளுக்குள் சென்று தன்னை அறிவது. அதிலும், விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்து, மனதை இளகுவாக்கிக் கொள்வது ஒரு டிரெண்டாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இளைஞர்களிடையே இந்த விஷயம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயம், ஆன்மிகம் இந்த இரண்டுக்கும் களம் அமைத்து, அதைப் பற்றிப் புரிந்துகொள்ள வழி அமைத்துக்கொடுத்து வருகிறது, நவதர்ஷனம்.

‘குட்டி இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள ஊர் தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்). குளுகுளு குளிருக்கும், அடர்ந்த புதர்க்காடுகளுக்கும் பெயர் பெற்றது இப்பகுதி. தளிக்கு அருகே உள்ள பழைமை வாய்ந்த குக்கிராமம் கெங்கனஅள்ளி. தமிழும் கன்னடமும் கலந்து பேசும் இவ்வூர் மக்கள், நவதர்ஷனம் என்று கேட்டால், பொறுமையாக வழிகாட்டுகிறார்கள். ஊரைக் கடந்து சிறிய ‘ஓனி’ (இருபுறமும் உயிர்வேலிகள் அடர்ந்த பாதை) வழியாகச் சென்றால் வருகிறது நவதர்ஷனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்