“விரைவில் விண்வெளிக்குச் செல்லும் அழைப்பு வரும்!” - இஸ்ரோ தலைவர் சிவன்

நேர்காணல்

`எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மிகப் பெரிய இலக்குகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரோ. நிலவில் கால்பதிக்கச் செல்லும் சந்திரயான்-2, சூரியனை ஆய்வு செய்யச் செல்லும் ஆதித்யா, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் என இப்போது இஸ்ரோவின் முன்னிருக்கும் இலக்குகள் அனைத்துமே சவாலானவை. இவை அத்தனையையும் செய்துமுடிக்கும் பொறுப்பைச் சுமந்துகொண்டிருப்பவர் சிவன்; இஸ்ரோவின் பெருமைமிகு கனவுகளை நனவாக்கவிருக்கும் தமிழர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கல்விளை எனும் சிறிய கிராமத்திலிருந்து வந்து, இன்று தேசத்தின் பெருமைமிகு அடையாளமான இஸ்ரோவின் தலைவராக உயர்ந்திருப்பவர். ``தீபாவளி மலருக்காக உங்களைச் சந்திக்கணுமே...'' என அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். உடனே, இஸ்ரோ அலுவலகத்திலிருந்து உதவியாளர் அழைத்தார். ``பெங்களூருக்கு வாங்க'' என்றார்; வீட்டுக்குச் சென்றோம். முதலில் உதவியாளர்கள்; அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள். இவர்களைக் கடந்துதான் யாரும் சிவனை சந்திக்கவே முடியும். முதலில் முழுமையாக விசாரித்தனர்; அடுத்து பாதுகாப்பு சோதனை. இரண்டையும் முடித்துவிட்டு வீட்டினுள் அனுமதிக்கப்பட்டோம். எவ்விதப் பரபரப்பும் இல்லாமல், புன்னகையுடன் வரவேற்றார் சிவன். அவரின் இளமைக்காலக் கனவுகளிலிருந்து இஸ்ரோவின் எதிர்காலத்திட்டங்கள் வரை நிறைய விஷயங்கள் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்