அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி - “எனக்கு அவர் ‘புரூம்ஸ்’ நான் ரோபோ!”

மித் பார்கவ்-ஸ்ரீரஞ்சனி - சின்னத்திரையயும், பெரிய திரையையும் பொறாமைப்படுத்தும் இணை. காரணம், காதல்... காதல்... காதலைத் தவிர வேறொன்றும் இல்லை. அமித்துக்கு விஜய் டி.வி-யில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீஸர் கேரக்டர். அதே சேனலில் வரும் ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியைக் கலகலவெனக் கொண்டுபோகும் வேலை ஸ்ரீரஞ்சனிக்கு. தற்போது ‘Dog House Diaries' என்கிற வெப் சீரிஸில் இருவருமே பிஸி.

``கூத்துப்பட்டறையில்தான் முதலில் அறிமுகமானோம். ஃப்ரெண்ட்லியா பேச ஆரம்பிச்சு, காதலில் விழுந்து, கல்யாணத்தில் முடிஞ்சது.வாழ்க்கை செமயா போயிட்டிருக்கு...” வெட்கம் கலந்து பேசும் அமித் பார்கவ்-ஐ அண்ணாந்து பார்த்து ரசிக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மைசூர். பி.எல் படிச்சிட்டிருக்கும்போது கன்னட ராமாயண சீரியலில் ராமராக நடிக்கும் வாய்ப்பு. பிறகு சென்னைக்கு வந்தேன். நடிப்பு ஆர்வத்தால் என்னால படிப்பில் கவனம் செலுத்த முடியலை. கடைசி வருஷம் 13 அரியர்ஸ். எங்கம்மாவுக்கு, ‘பையன் டிகிரி முடிக்கலையே’ என்ற வருத்தம். நான் அம்மாவுக்காக எதையும் பண்ணக்கூடியவன். அதனால, ஒரே மூச்சில் 13 அரியரையும் கிளியர் பண்ணினேன். பிறகுதான் `கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் வாய்ப்பு” என்றார் அமித்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்