பட்டம் பறக்கவிடும் பரவச அனுபவம் | Meet Kite Life Foundation Founder Rajesh Nair - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

பட்டம் பறக்கவிடும் பரவச அனுபவம்

சுற்றுலா

``எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளின் துணையோடு வாழும் குழந்தைகள், ரோபோக்களாகத்தான் வளர்வார்கள். அவர்களை மனிதர்களாக வளர்க்க ஆசைப்பட்டால், வீட்டை விட்டு வெளியே கொண்டுவாருங்கள். அவர்களுக்கு வெயில், மழை, தென்றல், புயல் அனைத்தையும் அறிமுகப்படுத்துங்கள்'' இன்றைய பெற்றோருக்கான அவசிய, அவசர அட்வைஸோடு ஆரம்பிக்கிறார் `கைட் லைஃப் ஃபவுண்டேஷ (Kite Life Foundation)'னின் நிறுவனர் ராஜேஷ். அமைப்பின் பெயரே பாதி அர்த்தம் சொல்லும். ஆம்... கைட் லைஃப் ஃபவுண்டேஷன் என்பது, பட்டம்விடும் ஆர்வலர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமன்றி, பட்டம்விடுவதில் ஆர்வத்தை உருவாக்கி, உற்சாகப்படுத்தவும் செய்கிறது.

`பட்டமா... அது பயங்கரமானதாச்சே!' எனப் பலரும் பதறலாம். கொச்சினில் வசிக்கும் ராஜேஷ் நாயர் பயிற்றுவிக்கும் பறக்கவிடும் பட்டங்கள் பாதுகாப்பானவை; பயமற்றவை. பட்டம் விடுவதைப் பொழுதுபோக்காக, விளையாட்டாக, கலையாக, படிப்பாகப் பார்க்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வை உருவாக்குவதே இவரது அமைப்பின் பிரதான நோக்கம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க